காவாலிகளின் கூடாரமாக மாறியுள்ள இலங்கை பாராளுமன்றம் ! சபாநாயகர் மீது பாய்ந்து தாக்க முயன்ற மகிந்த தரப்பு !

0

இலங்கை நாடுமன்றில் தற்போது பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது .மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ரணில் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இன்றைய பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்டு சிறிது நேரத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச விசேட உரையொன்றை நிகழ்த்தினார் .

இந்த உரையில் ரணில் தலைமையிலான ஆட்சியில் விலைவாசி அதிகரிப்பு , மத்தியவங்கி பிணைமுறி ஊழல் , பணவீக்கம் என்பன ஏற்பட்டதாகவும் இதே நிலை தொடர்ந்திருந்தால் நாடு அதால பாதாளத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார் .

நாடு வீழ்ச்சியை நோக்கி செல்வதை தடுப்பதற்காகவே தான் பிரதமர் பதவியை ஏற்றதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்தார் .

நல்லாட்சி அரசு மீது மகிந்த தெரிவித்த குற்றசாட்டுகளினால் ஆத்திரமடைந்த ரணில் தரப்பினர் பெரும் கூச்சலிட்டனர் .பதிலுக்கு மகிந்த தரப்பினரும் பெரும் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

வாக்குவாதம் முற்றிய நிலையில் மகிந்த தரப்பினர் சபாநாயகரை நோக்கி பாய்ந்து சென்றனர் .சபாநாயகரை பாதுகாப்பதற்காக ரணில் தரப்பு உறுப்பினர்கள் சபாநாயகரை சூழ்ந்து கொண்டனர் .

மகிந்த தரப்பு உறுப்பினர் ஒருவர் சபாநாயகரின் ஒலிவாங்கியை பிடுங்கி எறிந்தார் .இதனால் அவரது கையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது .

மற்றுமொரு மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சபாநாயகரை நோக்கை வாளி ஒன்றினை தூக்கி எறிந்து ரவுடித்தனம் புரிந்தார் .

நாடாளுமன்றினை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சபாநாயகர் வெளியேறினார் .தற்போது இலங்கை நாடாளுமன்றம் சந்தையை விட மோசமான இரைச்சலினால் நிறைந்து காணப்படுகின்றது .

ஒட்டு மொத்த ரவுடிகளும் காவாலிகளும் ஒன்றாக இணையும் இடமா நாடாளுமன்றம் என்ற சந்தேகம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது .

 

Leave A Reply

Your email address will not be published.