கிளிநொச்சியில் ஈபிடிபி சந்திரகுமாரின் மரக்காளை காந்தன் குழு ரகளை

0

கிளிநொச்சியில் உள்ளக வீதி ஒன்றின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது, ஈபிடிபி சந்திரகுமார் அணியின் மரக்காளை காந்தன் என்பவரும் அவரது அடியாட்களும் மதுபோதையில் வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் குறித்த வீதியை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

அப் பகுதியில் மரக்காளை வைத்திருக்கும் காந்தன் என்பவர் கடந்த பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு போனஸ் ஆசனத்தில் உறுப்பினர் ஆனவர். இவர் தனது நண்பர்களுக்கு சாராயத்தை வாங்கிக் கொடுத்து அவர்களை மதுபோதையில் அழைத்து வந்து வீதி புனரமைப்பு பணிகளை குழப்பினார்.

வந்தவர்கள் மதுபோதையில் தகாத வார்த்தைகளை பேசினர். சம்பவ இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மேலதிக அரசாங்க அதிபர், கரைச்சிப் பிரசே சபை தவிசாளர், கிராம சேவகர் ஜெனிட்டா ஆகியோர் இருந்தனர். மதுபோதையில் வந்த குறித்த குழுவை மரக்காளை காந்தன் இயக்கியுள்ளார். இவ்வாறு ரகளையில் ஈடுபடுமாறு சந்திரகுமார் ஆலோசனை வழங்கியதாக அங்கு வந்த குழுவை சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை அண்மையில், மகிந்த பிரதமராக பதவியேற்ற வேளையில் மரக்காளை காந்தன், கிளிநொச்சியில் வெடி கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டமை காரணமாக மக்களின் கடும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார். இவர் கிளிநொச்சியில் இன்னொரு சந்திரகுமாராக, டக்ளஸாக உருவாகி வருவதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.