குடிபோதையில் லுங்கியுடன் டாக்டர் அடித்த கூத்து ! திணறிய நோயாளிகள்

0

திருவையாறு அரசு ஆஸ்பத்திரியில் கடந்த திங்கட்கிழமை ராத்திரி டாக்டர் மகபூப் பாட்சா என்பவர் நைட் டியூட்டிக்கு வந்தார். வரும்போதே போதை.. நடக்க முடியாமல் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார். இப்படி இவர் ஆடிக் கொண்டே நடந்து வருவதை பார்த்த நோயாளிகளும், நர்ஸ்களும் ஷாக் ஆகி விட்டனர்.

எல்லோரும் தன்னை பார்க்கிறார்கள் என்று தெரிந்தும் பாட்சா ஏதேதோ பேசிக் கொண்டே நடந்து போனார். என்ன உளறினார் என்று யாருக்கும் புரியவும் இல்லை. நடந்து போய் கொண்டே இருந்தவர், திடீரென ஒரு ரூமுக்குள் சென்று அங்கு போட்டிருந்த கட்டிலில் ஏறி படுத்து கொண்டார். அந்த நேரம் பார்த்து ஒரு எமர்ஜென்சி கேஸ் வந்துவிட்டது. அதாவது விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட செய்துகொண்ட நபரை குத்துயிரும் கொலையிருமாக தூக்கி கொண்டு ஓடிவந்தார்கள்.

இதேபோல இன்னொருத்தருக்கு கையில் பலமாக அடிபட்டு ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. இரண்டுமே சீரியஸ் கேஸ்தான். அதனால் அங்கிருந்த நர்ஸ்சுகள் 2 எமர்ஜென்சி வந்துவிட்டதால் ஓடிப் போய் கட்டிலில் படுத்திருந்த டாக்டரை எழுப்பினார்கள். ஆனால் அவரால் எழவே முடியவில்லை. நீங்களே போய் என்னன்னு பாருங்க, என்னால எழ முடியலன்னு சொல்லி திரும்பவும் படுத்துக்கிட்டார்.

என்ன செய்யறதென்றே தெரியாத நர்ஸ்சுகள் திரும்பவும் பேஷன்ட்டுகள் என்ன ஆனார்களோ என்று பதறிக் கொண்டு ஓடிவந்தனர். இந்த நேரம் பார்த்து, டாக்டர் எழுந்து வந்து ரூம் கதவை பூட்டிக் கொண்டு போய் திரும்பவும் படுத்து கொண்டார். இப்போது நர்சுகள், ஹாஸ்பிடல் ஊழியர்கள் என எல்லோரும் ஓடிவந்து கதவை தட்டினார்கள். டாக்டர் திறக்கவே இல்லை. ஜன்னல் வழியாக எட்டி பார்த்தால் லுங்கியுடன் தூங்கி கொண்டிருந்தார்.

இதன்பிறகு தலைமை மருத்துவருக்கு தகவல் அளித்தனர். அவர் விரைந்து கதவை கட்டினார். அப்போதும் டாக்டர் பாட்சா அசையவே இல்லை. இதையடுத்து மாவட்ட
மருத்துவ பணிகள் இணை இயக்குனருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது

மக்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற டாக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் போதாது.. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். நல்லவேளை, போதையில் வந்த டாக்டர் பேசாமல் போய் படுத்து கொண்டார். அதே போதையில் எழுந்து போய் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருந்தால் எத்தனை உயிர் போயிருக்குமோ தெரியாது.

Leave A Reply

Your email address will not be published.