குண்டு வெடிப்பு அச்சுறுத்தல்: பிரான்சில் பாதுகாப்பு தீவிரம்

0

மஞ்சள் சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் போன்று உடையணிந்த மர்ப நபரொருவர் பிரான்ஸ் மேற்கு நகரான ஆங்கரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே கைக்குண்டொன்றை வெடிக்க வைக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தை தொடர்ந்து பிரான்சில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக, உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்படி, ஆங்கர் நகரில் பொலிஸாரும், பொலிஸ் வாகனங்களுகம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையேற்றத்திலிருந்து பின்வாங்குவதற்கான எவ்வித அறிகுறிகளும் அரசாங்கத்தில் தென்படாத நிலையில், எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட மஞ்சள் சட்டை போராட்டம் ஒரு வாரக் காலத்தை கடந்து தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அச்சுறுத்தலை ஏற்படுத்திய குறித்த நபருக்கும், மஞ்சள் சட்டை போராட்ட இயக்கத்திற்கும் தொடர்புள்ளதா என்பது தெளிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆ

Leave A Reply

Your email address will not be published.