கூகுள் தேடலில் கொடிகட்டி பறக்கும் சர்கார் ‘கோமளவல்லி’ ! துள்ளிகுதிக்கும் வரலக்ஷ்மி

0

இயக்குனர் முருகதாஸ் விஜய் கூட்டணியில் உருவான சர்கார் திரைப்படம் தீபாவளி தினத்தன்று திரைக்கு வந்து திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கின்றது .

கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் அதிமுக அரசியல்வாதிகளின் கோபத்தினை கிளறியுள்ளது .

சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று ஆளும் அதிமுக அரசியல்வாதிகள் அடாவடி பண்ணியதை தொடர்ந்து சில காட்சிகள் நீக்கப்பட்டு சர்கார் விஜய் ரசிகர்களின் வாயில் சர்க்கரை போட்டு கொண்டிருக்கின்றது .

சர்கார் படத்தின் சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டது வரலட்சுமி நடித்த ‘கோமளவல்லி’ என்ற கதாபாத்திரமே .இந்த கதாபத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதுடன் அரசியல்வாதிகளை கடுப்பாக்கியுள்ளது .

“கோமளவல்லி” இந்த கதாபாத்திர பெயர் இப்போது பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளது . கூகுளில் அதிகம் பேரால் தேடப்பட்டு வரும் பெயராக “கோமளவல்லி” ட்ரெண்ட் ஆகியுள்ளது .இதனால் வரலட்சுமி செம குஷியில் உள்ளாராம் .

கோமளவல்லி என்ற பெயர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கிசுகிசுக்கப்படுகின்றது .

ஜெயலலிதாவின் இயற்பெயர் சர்கார் படத்தின் வில்லி கதாபாத்திரத்திற்கு வைத்தது தான் அதிமுக அரசியல்வாதிகளின் கொந்தளிப்புக்கு காரணம் என்று அறியமுடிகின்றது .

கோமளவல்லி என்ற பெயர் உண்மையில் ஜெயலலிதாவின் இயற்பெயர் தானா? அந்த பெயரின் அர்த்தம் என்ன? இது தொடர்பான சந்தேகங்களை தீர்ப்பதற்காக நெட்டிசன்கள் இது தொடர்பில் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.

நெட்டிசன்களின் அதிக தேடலின் காரணமாக கூகுள் தேடலில் கோமளவல்லி தான் டிரெண்டிங்கில் உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.