கூட்டமைப்பிற்கு பதிலாக வடகிழக்கில் உதயமாகிறது பாரிய அரசியல் கூட்டணி?

0

சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் பல்வேறுபட்ட கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுவதைத் தவிர்த்து கூட்டணிகளாக களமிறங்க உத்தேசித்துள்ளதாக தகவல்கள்வெளியாகிவருகின்றன.

இந்த நிலையில் தெற்கில் மைத்திரி-மஹிந்த அணிகள் பாரிய கூட்டணி ஒன்றை உருவாக்கி போட்டியிடவுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுச் சின்னமொன்றில் சிறுபான்மைக் கட்சிகளை இணைத்து பாரிய கூட்டணி ஒன்றை உருவாக்கிப் போட்டிடிடவுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து ஆசனப் பங்கீடு தொடர்பான கடும் யோசனைகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

இதேவேளை முன்னாள் முதலமைச்சர் தலைமையில் உதயமான தமிழ் மக்கள் கூட்டணி மேலும் சில கட்சிகளை இணைத்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கி பொதுச் சின்னத்தில் போட்டியிடும் யோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இம்முறையும் தனித்தே போட்டியிடப்போவதாக மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்திருப்பதாக அதன் உள்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.