கோலியின் மனைவி அனுஷ்காவுக்கு மெழுகுச்சிலை அமைப்பு ! படம் உள்ளே

0

உலக கிரிக்கெட்டின் வரலாற்றினை தனது அபார சாதனைகள் மூலம் புரட்டி போட்டுக்கொண்டிருப்பவர் விராட் கோலி.

கோலியின் மனைவி பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கு சிங்கப்பூரில் முழு உருவ மெழுச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள மேடம் டூசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அனுஷ்கா ஷர்மாவின் உயரத்தை ஒத்த ஆளுயர மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது .

இந்த மெழுகு சிலையை நடிகை அனுஷ்கா ஷர்மா திறந்து வைத்துள்ளார் .

மேடம் டூசாட்ஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட அருங்காட்சியகம் விளையாட்டு, திரைத்துறை, கலைத்துறை, அரசியல், பொதுசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்திய பிரபலங்களின் சிலைகளை நிறுவி வருகின்றது .

இந்த அருங்காட்சியகத்தின் கிளைகள் இந்தியா உட்பட லண்டன், சிங்கப்பூர், சீனா உட்பட பல நாடுகளில் உள்ளமை குறிப்பிடத்தக்கது .

அனுஷ்கா செல்ஃபி எடுப்பது போல் இந்த மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது .இந்த மெழுகு சிலையுடன் அனுஷ்கா சர்மா போட்டோ எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

போட்டோவை பார்த்த ரசிகர்கள் எது மெழுகுச்சிலை எது அனுஷ்கா சர்மா என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர் .அந்த அளவுக்கு இந்த மெழுகு சிலை அசல் அனுஷ்கா ஷர்மாவை போலவே அமைக்கப்பட்டுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.