சபாநாயகர் மைக்கை உடைத்த இவரெல்லாம் கௌரவ பிரதிநிதியா?

0

பாராளுமன்றத்தில் சபாநாயகரின் ஒலிவாங்கியை (Mic) கையால் உடைக்கப் போனதன் விளைவு இது. திலும் அமுனுகமவிற்கு கையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் அரச சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதை எடுத்துச் சொல்ல மஹிந்த சார்பு ஊடகங்கள் இதுவரை முன்வரவில்லை. தெரன, ஹிரு போன்ற ஊடகங்கள் பாராளுமன்றத்தில் இடம் பெற்ற பிரச்சினையின் போது காயமடைந்ததாக சொல்லி நழுவிச் சென்றன.

விரலில் ஏற்பட்ட காயத்திற்காக இவரின் கைக்கு போடப்பட்டுள்ள பென்னாம் பெரிய கட்டைப் பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது.

இறுதி யுத்தத்தில் காயமுற்ற இராணுவ வீரர் போன்றதொரு ‘பில்டப்’ ஐ ஜயவர்தனபுர மருத்துவமனை மிகவும் கச்சிதமாக செய்திருக்கிறது.

இவர் ஒலிவாங்கியை உடைத்தாரா? ஒலிவாங்கி இவரின் கையை உடைத்ததா? என்ற சந்தேகமும் எழுகிறது.

அரச சொத்துக்கு சேதம் விளைவித்த ஒருவருக்கு பௌத்த தேரர் ஒருவர் ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வு இலங்கை போன்ற ஒரு நாட்டில் மட்டுமே இடம் பெறமுடியும்

Leave A Reply

Your email address will not be published.