சர்காரில் ஜெயலலிதா வேடத்தில் வரலட்சுமி! திரையரங்குகளை நொறுக்கிய அதிமுகவினர்!

0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் புகழுக்கும், தமிழக அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்த மதிப்பீடுகளுக்கும் கலங்கம் கற்பித்திடும் வகையிலான காட்சிகள் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் கொண்டிருக்கிற காரணத்தினால் அப்படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகளை அடித்து நொறுக்கிவருகின்றனர் அதிமுகவினர்.

இந்திய அளவிலான மாநிலங்களுடன் தமிழகத்தை ஒப்பிட்டால் தமிழகமே மருத்துவம், சமூக நீதி உள்ளிட்ட எல்லா துறைகளிலும் தன்னிறைவு பெற்று விளங்குகையில், அரசின் சமூக நல திட்டங்களை விமர்சிப்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என அமைச்சர்கள் படக்குழுவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது திரையரங்குகள் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக, சர்கார் குறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு, வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.