இளையதளபதி விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் நேற்று வெளியான சர்கார் திரைப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கின்றது .இந்த படத்தினை தளபதி ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி வருகின்றார்கள் .
கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள சர்கார் படம் விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது .இந்த மகிழ்ச்சியான தருணத்தில் சர்கார் திரைப்படத்தினால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது .
சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் என்னும் இளைஞர் இந்த விபரீதமான முடிவினை எடுத்துள்ளார் .
மணிகண்டன் தீபாவளியை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊரான ஈராளச்சேரி என்ற கிராமத்திற்கு சென்றார்.
மணிகண்டன் தனது ஊரினை சென்றடைந்த வேளை விஷமிகள் சிலர் சர்கார் படத்தின் பேனரை கிழித்து நாசகார செயலில் ஈடுபட்டனர் .
இந்த நிலையில் மணிகண்டனின் வீட்டுக்குள் நுழைந்த விஜய் ரசிகர்கள் சிலர் மணிகண்டன் தான் பேனரை கிழித்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
தான் பேனரை கிழிக்கவில்லை என்று மணிகண்டன் எவ்வளவு எடுத்து கூறியும் விஜய் ரசிகர்கள் கேட்கவில்லை .தன் மீது அபாண்டமாக பழி சுமத்தியதனால் மன விரக்தியடைந்த மணிகண்டன், தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் ஈராளச்சேரி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் 7 பேரிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர் ,