முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த சர்கார் படம் தீபாவளி தினத்தன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கின்றது .
சர்கார் படத்தினை முதல் காட்சியில் பார்த்து விட்டு திரும்பிய இரண்டு மாணவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் நாட்டின் சேலம் மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் தினேஷ்குமார் மற்றும் சித்திக் . 18 வயதான இவர்கள் இருவரும் கல்லூரியில் பயின்று வருகின்றனர்.
தினேஷ்குமார் மற்றும் சித்திக் இருவரும் விஜய்யின் தீவிர ரசிகர்கள் .தீபாவளிக்கு வெளியான சர்கார் படத்தினை முதல் காட்சிலேயே பார்ப்பதற்கு முடிவு செய்த இருவரும் காலை 6 மணி காட்சிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார்கள்.
சர்கார் படத்தினை பார்த்து மகிழ்ந்த இருவரும் 9.45 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிச் சென்றுகொண்டு இருந்தபோது கோர விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்கள்.
தினேஷ்குமார் மற்றும் சித்திக் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது .இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தினேஷ்குமாரும், சித்திக்கும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
சர்க்கார் படம் பார்க்கும் ஆவலுடன் சென்று வீடும் திரும்பும் போது தமது பிள்ளைகளுக்கு இவ்வாறு நடந்து விட்டதே என்று பெற்றோர் கதறியழுதனர்.
இந்த சோகமான செய்தி ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .