இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரம் அற்ற சூழ்நிலை காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன் பாராளுமன்றத்தை கலைப்பதாக அதிரடி அறிவிப்பு செய்துள்ளார்.
ரணில் மைத்திரி கூட்டணியில் இடம்பெற்ற நல்லாட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மஹிந்த தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடையும் என உறுதியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால கையொப்பமிட்டு அரச அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மைத்திரியின் இந்த அதிரடி அறிவிப்பினால் ஐக்கிய தேசியக்கட்சி , மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன .இந்த அறிவிப்பின் மூலம் ரணிலின் பிரதமராக மீண்டும் பதவியேற்பது தொடர்பிலான கனவு அடியோடு நிர்மூலமாகியுள்ளது .
இது தொடர்பான மேலதிக செய்திகளை எதிர்பாருங்கள்.