சாதிவெறி பிடித்த மாமியார்! டாக்டர் மருமகள் எடுத்த சோகமான முடிவு!

0

ஆந்திராவில் மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் இவரை பெற்றோர்கள் டாக்டருக்கு படிக்க வைத்தார்கள். மேலும் சீனாவுக்கு மேற்படிப்புக்காகவும் அனுப்பி வைத்தார்கள். படிக்க போன இடத்தில் கார்த்திக் என்பவரை காதல் செய்து கடந்த 2015ம் ஆண்டும் திருமணம் செய்துக்கொண்டனர்.<

ஆசை கணவனுடன் வாழ்ந்து வந்த ஜெயஸ்ரீ, இரு தினங்களுக்கு முன்பு நிறைய தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர் தற்கொலை குறித்து பொலிசார் விசாரணயை தொடர்ந்தனர்.

இது குறித்த அந்த பெண்ணின் தந்தை தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு அளித்த பேட்டியில்,

அதில், “லவ் பண்றேன்னு வந்து நின்னப்பவோ நாங்க ஒத்துக்கல… வேண்டாம்னு சொன்னோம். ஆனாலும் ஜெயஸ்ரீ பிடிவாதமாகவே இருந்ததால், அவள் ஆசைக்கு விட்டுவிட்டோம். வரதட்சணையாக 25 லட்சம் ரூபாய், 45 கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி என அள்ளி கொடுத்தோம்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட கார்த்திக் திரும்பவும் வரதட்சணை பணம் கேட்டு என்கிட்டே மகளை அனுப்பி வைச்சுட்டே இருப்பார். நானும் முடிந்தவரை கேட்ட பணத்தை கொடுத்திட்டேதான் இருந்தேன். ஒரு கட்டத்தில் என்னால் பணம் தர முடியாமல் நிறுத்திவிடவும் அப்போதான் பிரச்சனை ஆரம்பிச்சிருக்கு. இதில் மாமியாரும் சேர்ந்து கொண்டுள்ளார்.

வெடிக்கும்போதெல்லாம் சாதி பெயரை சொல்லி மகளை அதிகமாக துன்புறுத்தி இருக்காங்க.. இதுபற்றி பொலிசாரிடம் வரதட்சணை கொடுமை, சாதியக் கொடுமை அடிப்படையில் புகார் அளித்தேன்” என்றார்.

தந்தை அளித்த புகாரின்பேரில் பொலிசார் உடனடியாக கார்த்திக்கை கைது செய்து இருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.