சுப்ரமணியன் சுவாமி தொடர்பில் ஐ. தே.க. வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

0

பா.ஜ.கவின் மூத்த உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமியும், இலங்கையின் தேசத்துரோகியான மஹிந்த ராஜபக்சவும் இன்று கைகோர்த்திருப்பது கேவலமான செயற்பாடாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி விமர்சித்துள்ளது.

பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமனம் பெற்றதை அடுத்து அவருக்கான முதலாவது வாழ்த்தை ருவிட்டரில் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிம் இதனைக் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சி தவிசாளர், முன்னாள் அமைச்சர் – ‘எமது நாட்டு ஜனநாயகத்திற்கு எதிரான இந்த சதிக்குப் பின்னால் ஒத்துழைப்பு வழங்குபவர்கள் யார் என்றால் புதுமையாக இருக்கிறது. மஹிந்த ராஜபக்ச ஒரு தேசப்பற்று, இனப்பற்றாளன் என்று வாழ்த்து தெரிவிப்பவர்கள் யார்? முதலில் வாழ்த்து தெரிவிப்பவர்தான் சுப்ரமணியன் சுவாமி. பாஜக வின் மூத்த அதிகாரி மஹிந்தவுக்கு வாழ்த்து கூறுகிறார். சுப்ரமணியன் சுவாமி என்பவர் யார்? முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜெரி டி சில்வாவின் புத்தகத்தில் எழுதியிருக்கின்றார் 1980-களில் இலங்கைக்கு எதிராக இந்தியா, ஸ்ரீலங்காவை ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்னதாக ஐ.பி.கே படையினர் இங்கு வரமுன்னர் அங்கிருந்து மிகப்பெரிய ஆக்கிரமிப்பை செய்வதற்கு படகொன்றின் மூலம் இலங்கைக்கு வந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க தலைமைதாங்கியவர்தான் சுப்ரமணியன்சுவாமி. அவர்தான் மஹிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றார்.

அதனை ஆழமாக சிந்திக்க வேண்டும். எமது நாட்டை பலவீனப்படுத்த எவ்வகையான நாட்டுத் தூரோகிகள் செயற்படுகிறார்கள். தேசப்பற்று என்ற பெயரில் இப்படி முன்வந்திருப்பவர்களையிட்டு கவலையடைகிறோம். பலதடவை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை எதிர்க்கும் எமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.