ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம்! சவால் விடுக்கும் அமைச்சர்!

0

நாமல் குமார வெளியிட்ட கொலை சதித்திட்டம் தொடர்பான குரல் பதிவுகளில் ஜனாதிபதியை கொலை செய்யவதற்காக சதிதிட்டம் தொடர்பான எந்தவித தகவலும் இல்லை என, நல்லாட்சி அரசாங்கத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.

அத்துடன், கொலை சதித்திட்டம் உள்ளதா என்பது தொடர்பில் குறித்த குரல் பதிவுகளை மீண்டும் ஆராய்ந்து பார்க்க முன்வருமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ரஞ்சித் மத்தும பண்டார சவால் விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் கண்டியில் உள்ள அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் ரஞ்சித் மத்தும பண்டார இதனைக் கூறினார்.

ஆட்சி கவிழ்ப்புக்கு முக்கிய காரணம் தன்னை கொலை செய்ய முன்னெடுக்கப்பட்ட சதி என ஆட்சியளார் மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார்.

இந்த சதி முயற்சியை வெளிப்படுத்தியவர் நாமல் குமார என்பவர். அவர் செய்த முறைப்பாட்டுக்க அமைய நாங்கள் சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்தோம். இதற்காக நாங்கள் தொழிநுட்பத்தையும் பயன்படுத்தினோம். 124 குரல் பதிவுகள் அரச இராசாய பகுப்பாய்வு பிரிவுக்கு அனுப்பப்பட்டன. அதில் 123 குரல் பதிவுகள் உறுதிசெய்யப்பட்டன. எனினும், அதில் ஒரு இடத்தில் கூட ஆட்சியளார் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலை செய்ய சதத்திட்டம் தீட்டியமை குறித்து எந்த தகவலும் இல்லை. எனவே அதில் கொலை சதித்திட்டம் உள்ளதா என குறித்த குரல் பதிவுகளை மீண்டும் ஆராய்ந்து பாரப்போம் என நாங்கள் ஆட்சியாளர் மைத்திரிபாலவுக்கு சவால் விடுக்கின்றோம்.

இன்று குறித்த குரல் பதிவுகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு பொய் பிரசாரம் செய்கின்றனர். சட்ட ரீதியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பை 10 ஆக குறைத்துள்ளனர். நாங்கள் மஹிந்தவுக்கு 204 பொலிஸ் அதிரடிபடையினரையும் கோட்டாவுக்கு 70 பேரையும் வழங்கினோம்.

இவரகள் அரச ஊடகங்களை கைப்பற்றியதைபோல பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை கைப்பற்ற பாரக்கின்றனர். எனினும் மக்கள் அதற்கு இடங்கொடுக்காமல் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாதுகாப்பு வழங்கி வருக்கினறனர். இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதுடன் கட்டாயப்படுத்தி வருகின்றனர். மைத்திரிபால சிறிசேன சர்வாதிகாரமாக செயற்பட முனைகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.