டி-20 போட்டியிலும் சதம் விளாசிய ரோஹித் சர்மா !இந்தியா அபார வெற்றி

0

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் இந்த தொடரில் ரோஹித் சர்மா மிக நன்றாக விளையாடி அதிக சதமடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நடந்த 2வது டி-20 போட்டியிலும் அவர் 111 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

நேற்று லக்னோவில் நடந்த 2வது டி-20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 195 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 111 ரன்களும், தவான் 43 ரன்களும் அடித்தனர்.

196 என்ற கடின இலக்கை விரட்டிய மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்டு 71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணியில் உள்ளது. ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதினை வென்றார். இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி-20 போட்டி வரும் 11ஆம் தேதி சென்னையில் நடைபெறும்

Leave A Reply

Your email address will not be published.