தமிழ் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்படுகிறாரா சின்மயி? வெளியாகும் தகவல்கள்.!

0

சின்மயி, கஜா புயல் டெல்டா மாவட்டங்களை சிதைத்துப்போடுவதற்கு முன்னாள் அன்றாடம் செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும், சமூக வலைத்தளங்களும் இடைவிடாமல் உச்சரித்துக்கொண்டிருந்த பெயர். அதற்கான காரணம், அவர் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அதிரடியாக முன் வைத்தது தான்.

உலகம் முழுவதும் மீ டு இயக்கத்தினை முன்னிறுத்தி தமக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகளை சமூக வலைத்தளங்களில் பெண்கள் வெளிப்படுத்திக்கொண்டிருந்த சூழலில், தன் பங்குக்கு வைரமுத்து மீது அதிரடியான பல பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அந்த குற்றச்சாட்டுகள் தமிழ் சினிமா வட்டாரத்தில் தீயாக பற்றி எழுந்த சூழலில், குறிப்பிட்ட சாதிய பின்புலத்தை சார்ந்த சின்மயி வேண்டுமென்றே வைரமுத்து மீது புகார் கூறுவதாகவும், வேண்டுமானால் சின்மயி வழக்கு தொடரட்டும் எனவும் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

தான் சட்ட ரீதியாக இந்தவிவகாரத்தினை அணுகப்போவதாக தெரிவித்த சின்மயி ஏனோ மௌனியாகிப்போனார். அதே சமயம், டப்பிங் சங்கத்திலிருந்து இரண்டு வருடமாக சந்தா கட்டாத காரணத்தினால் நீக்கப்பட்ட சின்மயி, தான் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். டப்பிங் சங்கத்தினைப்போன்றே சினிமாவிலிருந்து தன்னை ஓரங்கட்டுவதற்கான பணிகள் குறிப்பிட்ட சிலரால் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார் சின்மயி.

Leave A Reply

Your email address will not be published.