தலைவன் என்ற சொல்லின் தலைமகன் ! ஆளுமையின் அகராதி !தமிழ்ச் சூரியன் உதயமான நாள் இன்று ! அகவை 64

0

தோழர் சேகுவரோ கூற்றின்படி உன் இனத்தில் யாருடைய பெயரை சொன்னால் எதிரி பயத்தால் நடுங்குகின்றானோ அவனே உன் இனத்தின் தலைவன். ஆம் நம் இனத்தின் தலைவனின் பிறந்ததினம் இன்று . உன் இனத்தில் யாருடைய பெயரை சொன்னால் எதிரி வடிவேல் நகைச்சுவை பார்குறதுபோல விழுந்து விழுந்து சிரிக்கின்றானோ அவனே உன் இனத்தின் தலைவன் என்று இன்று ஆகி விட்டது. மழைக்கு முளைத்த காளான் தலைவர்களின் தான் இன்று எம் விதியை நிர்ணயிப்பது வேதனைக்குரியது .

ஒரு ஐந்தடி உயரதுக்குள் இவ்வளவு ஆளுமைகளா??? ஒரு பக்கம் சண்டை இரத்தம் சதை. மறுபக்கம் ஊழல் கொள்ளை களவு, சாதி பேதம் , கற்பழிப்பு என்று எதுவுமே அற்ற ஒரு அரசாங்கம். ஒருபக்கம் சூரியனை விட பிரகாசமான உங்கள் விழிகளின் அனல் பறக்கும் பார்வை. கம்பீரமான நடை. எதிரியின் அத்தனை போர் திட்டங்களையும் அறியும் அஷ்டவதானி. மறுபக்கம் ஒரு குழந்தையை விட சாதுவான இளகிய மனம் கள்ளம் கபடமற்ற உங்களின் வெகுளியான சிரிப்பு, பேச்சு இவை எல்லாம் எப்படி சாத்தியம் என்று உங்களை பார்த்து வியக்காத நாட்களே இல்லை.

பத்தோடு பதினொன்று நீ இல்லையே. உலகமே பெயர் சொல்லும் ஒரு வீரன் நீ தானே.தமிழர் வரலாற்றில் வான்படை கண்ட முதல் தலைவனே இன்று தேர்தல் காலங்களில் மட்டும் உங்கள் பெயரை சொல்லி வாக்கு கேட்கும் போகப்பொருளாக ஆனதேனோ? அண்டத்தையே ஆளும் வல்லமை கொண்ட உங்களின் இமாலய வளர்ச்சி மூலம் வல்லரசுகளின் கழுகு கண்களையே எம் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நீங்கள்.

மரணத்தால் இரத்தமும் சதையாலும் உருவான ஒரு சாதாரண மனிதனை தான் அழித்துவிட முடியும். சுதந்திரவேட்கையும், நிகரில்லா ஆளுமையும், யாருக்கும் எதற்க்கும் எப்போதும் விலைபோகாத நேர்மையும், எந்த ஒரு சூழ்நிலையிலும் தளர்ந்துவிடாத கொள்கையும் எதிரியாலும் போற்றப்படும் ஒப்பற்ற வீரமும் கொண்ட ஒரு அதிசய பிறவியை மரணத்தால் அழித்துவிட முடியாது. எதரியின் போர் நுட்பங்களையும் அரசியல் ராஜதந்திரங்களையும் துல்லியமாக கணிக்க தெரிந்த நீங்கள் உங்களுடன் கூடவே இருந்து குழிபறித்த துரோகிகளை கண்டுபிடிக்க தவறிவிட்டிர்களே.

இல்லை என்பதற்க்கான ஆதாரங்கள் இல்லை என்பதனால் இருக்கின்றார் என்கிறார்கள். இருக்கின்றார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதானால் இல்லை என்கின்றார்கள். இருக்கின்றீர்களா அல்லது இல்லையா என்ற தேடல்கள் இன்னமும் தொடர்வதால் நீங்களும் கடவுளே.

வியந்து வியந்து விடை காண முடியாத தலைவருக்கு அகவை நாள் நல்வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.