தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட, கிளி நொச்சியிலுள்ள நிலக்கீழ் பதுங்குகுழி ஒன்றினை அழிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் இறங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் உள்ள குறித்த பதுங்குகுழியினை உடைக்கும் நடவடிக்கையினை இராணுவத்தினர் நேற்றிலிருந்து ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த பதுங்குகுழி 14 SLNG படைபிரிவின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வருகின்ற சுற்றுலாப் பயணிகளால் கடந்த ஆண்டு வரை ஆர்வத்தோடு பார்க்கப்பட்டுவந்தது.
ஆனாலும் இந்த ஆண்டு முதல் பகுதியிலிருந்து இது பார்வையிடுவதற்கான தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே குறித்த பதுங்குகுழி உடைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் குறித்த இடத்திற்குச் சென்று புகைப்படம் எடுக்கக் கோரியபோதும் இராணுவத்தினர் அதற்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வாசியுங்கள் ஈழம்நியூஸ் ஆசிரியர் பக்கம் https://goo.gl/YjVPXL
காந்தள் மலர்கள் – மாவீரர் நாளை நினைவுகூறும் அற்புதமான கவிதை, காட்சிகளுடன்.