தார் பூசி அழிக்கப்பட்ட தலைவரின் பெயர் புலி போல் காட்சியளிக்கும் அதிசயம் ! தென்னிந்திய பிரபலம் வெளியிட்ட படம் உள்ளே

0

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64ஆவது பிறந்தநாள் நேற்று பல இடங்களிலும் கொண்டாடப்பட்டது ..

இவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு இருந்தனர் ..

இந்த நிலையில் பிரபல தென்னிந்திய நடிகர் சதீஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த இவர், வல்வெட்டித்துறையில் உள்ள பிரபாகரனின் வீட்டுக்கு சென்று புகைப்படம் எடுத்திருந்தார்.

அந்த புகைப்படத்தை இன்று தனது டுவிட்டரில் பதிவேற்றி “தமிழ் தேசியத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்ததினம் இன்று…. தார் பூசி அழிக்கப்பட்டிருக்கும் அவர் பெயரும் புலி போல் தோன்றும் அதிசயம்” என குறிப்பிட்டுள்ளார்.

உற்று பாருங்கள் புலியின் தோற்றம் தெரிகின்றது .இந்த புகைப்படம் பேஸ்புக்கில் வைரல் ஆகியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.