நள்ளிரவில் நடிகைகளுடன் கூத்தடித்த ஷாருக்கான் ! கும்மியடித்த போலீஸ்

0

பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் இந்தி திரையுலகில் கொடிகட்டி பறப்பவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் சுண்டு விரலில் இழுத்து வைத்திருக்கும் வசியக்காரன் தான் ஷாருக்கான்.

நடிகர் ஷாருக்கான் நள்ளிரவில் மிகுந்த சத்தத்துடன் பார்ட்டி கொண்டாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தனது பிறந்தநாள் மற்றும் தீபாவளியை முன்னிட்டு ஷாருக்கான் தனது வீட்டின் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் விருந்து வழங்கினார் .

இந்த விருந்து நிகழ்ச்சிக்கு பாலிவுட் நடிகர் நடிகைகளை அழைக்கப்பட்டிருந்தனர் .அமீர்கான், மாதவன், கரண் ஜோஹர், கரீனா கபூர், கத்ரினா கைப், அலியா பட், டாப்சி, ஷில்பா ஷெட்டி உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு குதூகலித்தனர் .

நள்ளிரவு தாண்டி அதிகாலை 3 மணிவரை இந்த நிகழ்ச்சி நீடித்துள்ளது .அதிகாலை வரை நடிகர் நடிகைகள் பெரும் கூச்சலிட்டு கூத்தடித்தனர் .

பயங்கர இசையுடன் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சி அக்கம்பக்கம் உள்ளவர்களின் காது சவ்வுகளை கிழித்தது .சத்தம் தாங்க முடியாத அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் போலீசில் முறைப்பாடு செய்தார்கள் .

முறைப்பாட்டின் அடிப்படையில் நட்சத்திர விடுதிக்கு அதிரடியாக நுழைந்த போலீசார் உடனடியாக பார்ட்டியை முடித்துக்கொண்டு அனைவரையும் வெளியேறுமாறு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர் .

அயலவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் நிகழ்ச்சியை நடாத்த அனுமதித்த நட்சத்திர விடுதியின் நிர்வாகத்தினரையும் போலீசார் எச்சரித்தார்கள் .அதனை தொடர்ந்து ஷாருக்கான் மற்றும் சக நடிகர்கள் விடுதியை விட்டு கிளம்பி விட்டார்கள் .இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.