நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பில் உலகமே எதிர்பார்த்திருந்த தீர்ப்பு சற்று முன் வெளியானது ! உச்ச கட்ட கொதிநிலையில் இலங்கை அரசியல்

0

இலங்கையின் நாடாளுமன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் மாதம் 7ம் திகதி வரை இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது .

ரணில் மைத்திரி கூட்டணியில் இடம்பெற்ற நல்லாட்சி ஜனாதிபதி மைத்திரியினால் கவிழ்க்கப்பட்டமையை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றார் .இதனால் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .

மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமை சட்டத்துக்கு முரணானது என்று ரணில் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அலரிமாளிகையை விட்டு வெளியேற மறுத்தார் .

பாராளுமன்றினை உடனடியாக கூட்டி மகிந்த தரப்பு நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் முஸ்லீம் கட்சிகள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தன .

இந்நிலையில் நாடாளுமன்றினை அதிரடியாக ஒத்திவைத்தார் மைத்திரி .இதற்கு எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்பினை தெரிவித்தன .அமெரிக்கா,பிரித்தானியா ,ஆஸ்திரேலியா , சுவிஸ் நோர்வே உள்ளிட்ட நாடுகளும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் அதிருப்தி தெரிவித்தன .

உடனடியாக நாடாளுமன்றினை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்த நிலையில் கடந்த ஒன்பதாம் திகதி நள்ளிரவு ஜனாதிபதி நாடாளுமன்றினை அதிரடியாக கலைத்தார் .இதனால் இலங்கையின் அரசியல் உச்சக்கட்ட கொதிநிலைக்கு சென்றது .

ஜனாதிபதி நாடாளுமன்றினை கலைத்தமை அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடு நாட்டின் ஜனநாயகத்தினை மீறும் செயல் என்று ஆட்சேபனை தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சி , தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜேவிபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் வழக்கு தாக்கல் செய்திருந்தனர் .ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது .

இந்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .எனிலும் நேற்றையதினம் தீர்ப்பினை வழங்காத நீதிமன்றம் இன்றைய தினம் தீர்ப்பினை ஒத்திவைத்தது.

இன்றையதினம் காலை பத்து மணிக்கு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த மூன்று நீதிபதிகள் உள்ளடங்கிய
உயர்நீதிமன்ற குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றினை கலைத்தமை தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை மார்கழி மாதம் 7ம் திகதி வரை ரத்து செய்துள்ளதாக தெரிவித்து தீர்ப்பளித்துள்ளது ,

உயர்நீதிமன்றின் இந்த அதிரடி தீர்ப்பு இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது .

உயர்நீதிமன்றின் தீர்ப்பினால் ஐக்கிய தேசிய கட்சி,தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளன .எனிலும் டிசம்பர் மாதம் 18 திகதி தான் இறுதியான முடிவு கிடைக்கும் .அது வரை இலங்கை அரசியல் கொதி நிலையில் இருக்கும் என்பது உறுதி ,

வர்த்தமானி அறிவித்தல் டிசம்பர் 7ம் திகதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளமையினால் மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .

நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் மகிந்த தரப்பு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் .ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க மஹிந்தவிடம் போதுமான உறுப்பினர்கள் இல்லை .ஆதலால் மீண்டும் ரணில் பிரதமராக தொடர்வார் .

மீண்டும் நாடாளுமன்றினை கூட்டுதல் தொடர்பிலான உறுதிப்படுத்தப்பட்ட செய்தியை எமது இணையதளத்தில் எதிர்பாருங்கள் .

Leave A Reply

Your email address will not be published.