நாட்டின் அரசியல் சீர்கேட்டால் சர்வதேச பார்வைக்குள் ஆதிக்குடிகளும் சிக்கியுள்ளன!

0

நாட்டை ஆட்சிபுரியும் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் காரணமாக இலங்கையின் ஆதிக் குடிகளும், சர்வதேச சமூகத்தினர் முன் அசௌகரியங்களுக்கு உள்ளாக நேரிட்டுள்ளதாக ஆதிக்குடிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலா அத்தோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறுபிள்ளைகள் போன்று செயற்படுவதால், சர்வதேச ரீதியாக நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவா தெரிவித்துள்ளார். நாடு என்ற வகையிலும், இனம் என்ற ரீதியிலும் பெரும்பான்மை சமூகம் என சர்வதேச சமூகத்திற்கு எடுத்தியம்புகின்ற போதிலும், ஆட்சியாளர்களின் கொள்கை ரீதியிலான நடத்தைகள் மற்றும் கலாசாரம் ஆகியன கேள்விக்குள்ளாகியிருப்பதாக ஊருவரிகே வன்னிலா அத்தோ சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் 28 நாடுகளின் பங்குபற்றலுடன் அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற பாரம்பரிய மருத்துவ சம்மேளனத்தில் ஆதிக்குடிகளின் தலைவர் கலந்துகொண்டிருந்தார். இதன்போது, இலங்கைக்காக பெயர் குறிப்பிட்டு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைக்குப் பக்கத்தில் சென்றபோது, அங்கிருந்த ஏனையவர்களின் சலசலப்புகள் நாட்டின் மீதான அவர்களின் எண்ணவோட்டத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் சண்டையிட்டுக் கொள்வதும், மிளகாய்ப் பொடி வீசுவதும் கீழ்த்தரமான செயல்களாகும் என ஆதிவாசிகளின் தலைவர் மேலும் அதரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.