நாட்டு மக்களின் நலனை சீர்குலைக்கிறார் மைத்திரி ! சமந்தா பவர் காட்டம்

0

நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார். அவர் மீது நம்பிக்கை கொண்டிருந்த நாட்டு மக்களின் நலனை அதிகாரத்தின் ஊடாகச் சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றார் என ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடர்ந்து வருகின்ற அரசியல் குழப்பநிலை உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச மட்டத்திலும் பல்வேறு எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே சமந்தா பவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.