நாம் எப்போதும் ஈபிடிபிதான்! அமைச்சர் டக்ளஸ் பின் செல்லும் தவராசா, சந்திரகுமார்!

0

பணப் பங்கீட்டு முரண்பாட்டினால் சில காலம் தள்ளி நின்ற முன்னாள் வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவை மீண்டும் அணைத்துக் கொண்டுள்ளது ஈ.பி.டி.பி. நேற்று ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, தவராசா ஒன்றாக இணைந்து ஜனாதிபதி செயலகத்திற்கும் சென்றிருந்தனர்.

ஈ.பி.டி.பியின் கொழும்பு வீடு விற்பனை சமயத்தில் , சில கோடி ரூபா பணத்தை தவராசா பங்கு தொகையாக கோரியிருந்தார். இதனால் ஈ.பி.டி.பி அவரை கட்சியிலிருந்து நீக்கும் முடிவை எடுத்தது. அதற்கான முயற்சிகளிலும் இறங்கியது. தவராசாவின் வடக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் பறிக்க முயன்றது.

மாகாணசபை தேர்தல் நெருக்கலாமென்ற ஊகங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஈ.பி.டி.பி முகாமில் ஐக்கியமாகும் முயற்சிகளை தவராசாவும் சந்திரகுமாரும் மேற்கொண்டுள்ளனர். ஈ.பி.டி.பியின் கனடா பிரமுகர் ஒருவர் சில மாதங்களின் முன்னர் தவராசாவை இணைக்க முயற்சியை மேற்கொண்டது.

தற்போது புதிய அரசில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சு பதவியை ஏற்ற பின்னர், இணைவு துரிதமாகியுள்ளது.டக்ளஸ், தவராசா இருவரும் நேரடியாக பேச்சு நடத்தி, இருதரப்பும் ஒன்றிணைந்து செயற்படுவதென இணக்கம் கண்டன. இதன்பின்னரே அண்மையில் ஈ.பி.டி.பியின் தொலைக்காட்சியில் தவராசாவின் நேர்காணல் ஒளிபரப்பப்பட்டது. இதன்போது, நான் இன்னும் ஈ.பி.டி.பி உறுப்பினர்தான் என தவராசா கூறியிருந்தார்.

கடந்த காலத்தில் தேர்தல் தோல்வியுடன் தனியாக தேர்தலில் நின்றால்தான் வெல்லலாம் எனக் கூறியபடி கிளிநொச்சியில் தனி அலுவலகம் அமைத்திருந்த சந்திரகுமாரும் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்துள்ளார். நாம் எப்போதும் ஈபிடிபிதான் என்று சந்திரகுமார் கூறியுள்ளார். இவர்கள் அமைச்சர் பதவி இல்லாவிட்டால், டக்ளஸ் தேவானந்தாவை விட்டு விலகி இருப்பதும், பின்னர் அமைச்சர் ஆனவுடன் வந்து ஒட்டிக் கொள்வதும் கடந்த காலத்தில் மாறி மாறி இடம்பெறுவதாக அக் கட்சி ஆதரவாளர் ஒருவர் கூறினார். இதுதான் ஒட்டுக்குழு என்பதன் அர்த்தம் என்கிறார் தமிழரசுக் கட்சி ஆதரவாளர் ஒருவர்.

Leave A Reply

Your email address will not be published.