நிர்வாண வீடியோவால் வாழ்க்கையை தொலைத்தேன்! ஒரு பெண்ணின் சோக கதை ! இறுதியில் நடந்தது என்ன ?

0

கேரளாவை சேர்ந்த 3 குழந்தைகளின் தாய் தவறாக சித்தரிக்கப்பட்ட நிர்வாண வீடியோ வெளியான காரணத்தால் தனது கணவன் மற்றும் குழந்தைகளை பிரிந்து, தனி ஆளாக போராடி தற்போது தான் குற்றமற்றவள் என நிரூபித்துள்ளார்.

தொடுபுழாவை சேர்ந்த சோபா என்ற பெண்மணிக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு, பெண்மணி ஒருவர் ஆடைகளை மாற்றும் நிர்வாண வீடியோ வெளியானது.அந்த வீடியோவில், மார்பிங் தொழில்நுட்பத்தில் சோபாவின் முகம் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. வாட்ஸ் ஆப் வாயிலா இந்த வீடியோ வேகமாக பரவி, சோபாவின் கணவருக்கும் வந்துள்ளது.

இதனால், இவர்களது குடும்பத்துக்கு பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் சோபாவை நம்புவதற்கு தயாராகவில்லை. இந்த வீடியோ தொடர்பாக சோபா, பொலிசில் புகார் அளித்தார்.

இதனால் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், இதனை அவமானமாக கருதிய கணவன், சோபாதான் அந்த வீடியோவை வெளியிட்டார் என கூறியதால், சோபாவுக்கு எதிராக விசாரணை திரும்பியது.

மேலும், சோபாவால் எனது குழந்தைகளும் மோசமாகிவிடுவார்கள் என கூறி, நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார் கணவர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையிலும், தான் குற்றமற்றவள் என நிரூபிப்பதற்காக சோபா போராடி வந்தார்.

விவாகரத்து வழக்கு நடந்து வந்த காரணத்தால், குழந்தைகளை தன்னுடன் கணவர் வைத்துக்கொண்டார். தனது குழந்தைகளை பார்ப்பதற்கு சோபா சிரமப்பட்டுள்ளார்.மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே தனது குழந்தைகளை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் இந்த உலகம் தன்னை நம்பவேண்டும். எதிர்காலத்தில் எனது குழந்தைகள் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும்.

அவர்கள் தன்னை புரிந்துகொள்ள வேண்டும் என சோபா போராடியுள்ளார்.கேரளாவின் C-DAC ( a cyber forensics research and investigation ) தொடர்பு கொண்டு அந்த வீடியோ குறித்த உண்மையை ஆராய புகார் கொடுத்துள்ளார். இந்த சோதனையில், அந்த வீடியோவில் உள்ளது சோபா இல்லை என்பது உறுதியானது.

மேலும், இந்த வீடியோவை பரப்பியது Litto என்ற வாலிபர் என சைபர் கிரைம் கண்டுபிடித்தது. தற்போது Litto கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அனைத்து பிரச்சனைகளும் முடிந்து விட்டநிலையில், என்னுடைய குழந்தைகளை மீட்டெடுப்பதன் மூலம் என எதிர்காலம் எனக்கு அமையும் என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் எனது கணவர் எனக்கு உறுதுணையாக இருந்திருந்தால், நான் இவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கமாட்டேன் என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.