ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலட்சியம் செய்யும் வகையில் நடந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தான் பதவி நீக்கிய பிரதமரை, ஜனாதிபதி நேரில் சந்தித்தார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சி பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் இயல்பான முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பேசினார்.
அவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். எனினும், ரணில் விக்கிரமசிங்கவுடன், அவர் பேசாமல், கண்டுக்கொள்ளாமல் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கருத்துக்களுக்கும் பதிலளிக்காமல் தவிர்த்துக் கொண்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக, நேற்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் சஜித் பிரேமதாசவே ஐதேக தரப்பில் கலந்து கொள்வதாக இருந்தது.
எனினும் கடைசி நேரத்திலேயே ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பதாக முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.