நேற்றைய ரணகளத்தின் பின்னர் ரணிலுக்கு எச்சரிக்கை விடுக்கும் மஹிந்த!

0

நாடாளுமன்றில் சட்டரீதியாக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்குமாயின் பதவியை துறக்க தயாராக இருந்ததாக அம்பாந்தோட்டை – கசாகல விகாரையில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது நாடு ஜனநாயக நாடு ஆகவே அனைவருக்கும் கருத்து சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது எதிர்ப்புக்களை வெளிப்படுத்துவது பிரச்சினையல்ல என்றும் ஆனால் நாடாளுமன்றிற்கு வரும் போது கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை எடுத்து வருவதற்கு எதிராக சபாநாயகரே சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனாலும் சபாநாயகர் அதற்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையோ ஒழுக்காற்று நடவடிக்கையோ இதுவரை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்த்தரப்பினர் சட்டவிரோதமாக நாடாளுமன்றில் தொடர்ந்து செயற்படுவார்களாயின் எமது தரப்பினரும் அதற்கு ஏற்ற வகையில் பதில் அடி வழங்குவார்கள் எனவும் எச்சரிக்கும் விதமாகத் தெரிவித்துள்ளார்..

Leave A Reply

Your email address will not be published.