பறிபோகுமா மஹிந்தவின் பிரதமர் பதவி! ராஜினாமா செய்ய தீர்மானம்!

0

சிறிலங்கா நாடாளுமன்றம் நவம்பர் 14 ஆம் திகதியான நாளைய தினம் முற்பகல் பத்து மணிக்கு கூடவுள்ளது. இதற்கான அறிவிப்பை சற்று முன்னர் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைத்து அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன விடுத்த விசேட வர்த்தமானி அறிவித்தலை டிசெம்பர் 7 ஆம் திகதிவரை இடைநிறுத்தி உச்ச நீதிமன்றம் இன்று மாலை இடைக்கால தடை உத்தரவொன்றைவிதித்தது.

இந்த தடை உத்தரவு வெளியாகி சில மணி நேரங்களுக்கள் சபாநாயகர் கரு ஸயசூரிய சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவினால் நவம்பர் 4 ஆம் திகதி 2095 இன் கீழ் 50 என்ற இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய நாடாளுமன்றம் நாளைய தினம் 10 மணிக்கு கூடும் என்று அறிவித்திருக்கின்றார்.

இதற்கமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாளைய அமர்வில் கலந்துகொள்ளுமாறும் சபாநாயகர் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இதேவேளை உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து நாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப்படும் என்றும், நாளைய தினம் தமது பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி சூளுரைத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.