பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு எதிரானது அல்ல ! சட்டமா அதிபர் தெரிவிப்பு

0

பாராளுமன்றை கலைப்பதற்கான ஜனாதிபதியின் கட்டளை சட்ட பூர்வமானது என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார் .மேலும் ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நீராகரிக்குமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் .

ஜனாதிபதி நாடாளுமன்றினை கலைத்தமை அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடு நாட்டின் ஜனநாயகத்தினை மீறும் செயல் என்று ஆட்சேபனை தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சி , தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட காட்சிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர் .

இந்த வழக்கு தற்போது இடம்பெற்று வருகின்றது .இதன் போதே சட்டமா அதிபர் தனது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளார் .ஜனாதிபதி நாடாளுமன்றினை கலைத்தமை சட்டபூர்வமானதா அல்லது எதிரானதா என்பது இன்று தெரிந்துவிடும் .

Leave A Reply

Your email address will not be published.