பிக்பாஸ் ஜூலி படத்திற்கு தடை? ஏன் தெரியுமா?

0

பிக்பாஸ் முதல் சீசனில் அதிகம் சர்ச்சைக்கு உள்ளானவர் ஜூலி. இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு அதிகம் புகழ் கிடைத்தாலும், அவரை பலரும் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கவே செய்தனர்.

அதன் பிறகு அவர் சினிமாவில் நடிப்பதாக கூறப்பட்டது. நீட் தேர்வு காரணமாக மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த கதையை “டாக்டர் அனிதா எம்பிபிஎஸ்” என்ற தலைப்பில் அஜய்குமார் என்ற திரைப்படமாக எடுத்து வருகிறார். அந்த படத்தில் தான் ஜூலி அனிதாவாக நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்திற்கு தடை கேட்டு அனிதாவின் அப்பா வழக்கு தொடர்ந்துள்ளார். “எனது மகள் தொடர்பான திரைப்படத்துக்கு நானோ எனது மகனோ எந்தவித அனுமதியும் வழங்கவில்லை. அதனால், அஜய்குமார் இயக்கும் திரைப்பட தயாரிப்புக்கு தடை விதிக்கவேண்டும். மேலும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூ.25 லட்சம் வழங்கவேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.