பிரபாகரன் இறக்கவில்லை எனில் நாம் போர்க்குற்றவாளிகள் இல்லை! நாமல்

0

வேலுப்பிள்ளை பிரபாகரன் இறக்கவில்லை என கூறுபவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றவாளிகள் இல்லை என கூற வேண்டும் அப்படி செய்யாமல் இந்த குற்றச்சாட்டை அவர்கள் முன்வைக்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழீழ விடுதலை புலிகளின் பெயரை கூறி சில அரசியல் வாதிகள் பிழைப்பு நடத்துகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலை தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன் போது தமிழகத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் பிரபாகரன் என்னும் உயிரிழக்கவில்லை என்றும், அவர் உயிருடன் இருப்பதாகவும் கூறுகின்றனர் என கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அவர்,

“பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்றால் எதற்காக எம்மீது உலக நாடுகள் போர்க்குற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறினால் அவர்கள் எதைப்பற்றியும் குற்றச்சாட்டு முன்வைக்க கூடாது.

வேலுப்பிள்ளை பிரபாகரன் இறக்கவில்லை என்றால், மஹிந்த ராஜபக்ஷ போர்க்குற்றவாளிகள் இல்லை என அவர்கள் கூற வேண்டும்.

ஒரு சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷ குற்றவாளி என கூறுகின்றார்கள், ஒரு சமயம் மஹிந்த அரசாங்கத்தால் கொல்லப்பட்டவர் உயிருடன் இருப்பதாக கூறுகின்றார்கள். அவர்கள் தங்கள் பிழைப்பிற்காக கூறிக்கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழகத்தில் உள்ள அரசியல் வாதிகள் இது போன்று கூறுகின்றார்கள். அதேவேளை வடக்கு மாகாணத்திலும் இதே போன்று இருக்கின்றனர். அவர்கள் விடுதலை புலிகளின் பெயரை கூறி பிழைப்பு நடத்துகின்றனர்.

இது தவறு. எனவே படித்த தமிழ் இளைஞர்கள் இதற்கு எதிராக செயற்பட்டு மக்கள் இணைந்து வாழ வழியமைக்க வேண்டும் தங்கள் பிழைப்பிற்காக தமிழ் சமுதாயத்தை பயன்படுத்தும் அரசியல்வாதிகளை அனுமதிக்க கூடாது.” என கூறினார்.

மேலும் தமிழ் சமூகம் மீது உண்மையான அக்கறை இருக்கும் என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்றும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.