பிரபாகரன் வேடத்தில் நடிகர் பாபி சிம்ஹா

0

1954 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பிறந்த பிரபாகரனின், 64வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘சீறும்புலி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை ஸ்டுடியோ 18 நிறுவனம் தயாரிக்கிறது. ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட் மேன்’ ஆகிய படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ் குமார் இதனை இயக்கி வருகிறார்.

இந்தப் போஸ்டரில் பிரபாகரனைப் போல் ராணுவ தோற்றத்தில் நடிகர் பாபி சிம்ஹா ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். அவர் அருகில் புலி ஒன்று உள்ளது.

புலியின் தலையில் அவர் கையை வைத்துள்ளார்.

சீறும் புலி என்ற தலைப்பிற்கு மேலே ‘மக்கள் தலைவனின் எழுச்சி’ என்ற வாசகமும், தலைப்பிற்கு கீழே ‘வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு’என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.