உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில் கேட்ஸ், தன்னுடைய குழந்தைகளின் 14 வயது வரை பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வளர்த்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் செல்போன் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை உபயோகிக்காத மனிதர்களை காண்பது மிகவும் அரிதான ஒன்றாகவே இருந்து வருகிறது.
பிறந்து விவரம் மட்டுமே தெரிந்த குழந்தைகள் கூட செல்போன் வேண்டும் என அடம்பிடிக்கிறது. அதுவும் சிறிது வளர்ந்துவிட்டால் போதும், சமூகவலைத்தளத்தில் தனக்கென்று ஒரு கணக்கு துவங்கி பயன்படுத்த ஆரம்பிக்கிறது.
இதை ஒரு சில நேரம் நல்லவற்றிற்காக பயன்படுத்தினாலும், பெரும்பாலான குழந்தைகள் செல்போன்கள் மற்றும் ஆடம்பர பொருட்களினால் தங்களுடைய வாழ்க்கையையே தொலைத்து விடுகின்றனர்.
சாதாரணமான மக்களின் குழந்தைகளே இந்த அளவிற்கு என்றால், உலகிலேயே மிகப்பெரிய பணக்காரரான பில்கேட்ஸின் குழந்தைகள் எப்படியெல்லாம் வளர்ந்திருப்பார்கள்? என்றெல்லாம் நாம் கற்பனை செய்து பார்த்தால் அங்கு தான் தவறு நடக்கிறது.
இதுகுறித்து பில்கேட்ஸ் ஒரு தனியார் இணையதளத்திற்கு பேட்டியளிக்கையில், தன்னுடைய மூன்று குழந்தைகளும் 14 வயதை அடையும்வரை செல்போன் உபயோகிக்க தடை விதித்துள்ளார். வயதை தாண்டினாலும், சாப்பிடும்போதும், கட்டிலில் செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளார்.
இதுபோன்று விதிக்கப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகள் பற்றி அவருடைய குழந்தைகள் புகார் கூறியுள்ளனர். ஆனால் தன்னுடைய விதிமுறைகளிலிருந்து சிறிதளவும் தளராமல் இருந்துள்ளார் பில்கேட்ஸ்.
பில் கேட்ஸிற்கு 2 மற்றும் 16 வயதில் இரண்டு மகள்களும், 19 வயதில் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.