பெரும்பான்மை இல்லாத நிலையில் எதற்காக அரசாங்கம்? மஹிந்தவின் சகா அதிரடி!

0

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் எதற்காக அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று மஹிந்தவாதியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

நாடாளுமன்றம் இன்றைய தினம் கூடுவதற்கு முன்னதாக அவைக்குள் சென்றிருந்த மஹிந்தவாதிகள் நாடாளுமன்ற ஆசனத்தையும், அதன சூழவுள்ள பகுதியையும் பலவந்தமாக கையகப்படுத்தி தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களையும் மீறி சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற அவைக்குள் பொலிசாரின் பாதுகாப்புடன் உள்ளே வந்து அவை நடவடிக்கைகளை முன்னெடுத்த போது, கதிரை உட்பட கையில் கிடைத்த அணைத்தையும் கொண்டு சபாநாயகர் மீதும், அவருக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிசார் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வெறியாட்டம் ஆடினர்.

இந்த வெறியாட்டத்தில் இணைந்துகொள்ளாது தொலைவில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மூன்றுவார பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மிக நெருக்கமான அரசியல்வாதியாக கருதப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கடும் அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றார்.

நாடாளுமன்றில் எமக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்றால் நாம் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும். எமக்கு ஆட்சியில் இருந்த அனுபவமும் இருக்கின்றது. அதேபோல் எதிர்கட்சியில் இருந்த அனுபவமும் இருக்கின்றது ஆனால் இன்று 113 பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் நாம் இன்று பலவந்தமாக ஆட்சியில் இருந்துகொண்டிருக்கின்றோம்” என்றும் வெல்க கூறினார்.

அதேவேளை தமது கட்சியில் இன்று மூத்த உறுப்பினர்கள் கூறுவதை எவரும் செவிமடுப்பதில்லை என்றும் விசனம் வெளியிட்டார்.

அது மாத்திரமன்றி இந்த நிகழ்வுகள் சர்வதுச அரங்கில் நாட்டிற்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்திவிடும் என்றும் கவலை வெளியிட்டார்.

“இன்றைய குழப்பம் இடம்பெற்ற போது களரியில் வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலர் இருந்ததை அவதானித்தேன். அவர்கள் எமது நாடாளுமன்றில் இடம்பெற்ற இந்த சம்பவங்களை அவர்களது நாடுகளுக்கு தெரியப்படுத்துவார்கள். இதனால் எமது நாட்டின் எதிர்காலத்திற்கு என்ன நடக்கும் என்பதைக்கூட இன்று எவரும் சிந்தித்துப் பார்க்கவில்லை. இந்த நிகழ்வுகளை மஹிந்த ராஜபக்ச போன்ற மூத்த அரசியல்வாதியொருவர் அனுமதிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனினும் அவரது சகாக்கள் இவ்வாறு செயற்படுவதால் மஹிந்தவின் பெயருக்கே களங்கம் ஏற்படும் என்று குமூர வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.