மகிந்தவைப் பிரதமராக்கியது இவரா ? வெடித்தது புதிய சர்ச்சை ! படம் உள்ளே

0

மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்மொழிந்தது அவரது சகோதரரான டட்லி சிறிசேனவா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான டட்லி சிறிசேன பொலன்னறுவையில் பிரபலமான அரிசி ஆலை வணிகராவார்.

அவரது 58 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும், மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவருமான உதயங்க வீரதுங்க வாழ்த்துச் செய்தியொன்றைத் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

இதில்,டட்லி சிறிசேனவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருப்பதுடன் மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் முன்மொழிந்தமைக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தன்னையும்,கோத்தாபய ராஜபக்சவையும் கொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தவறியதால் தான் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கி விட்டு மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்ததாக ஜனாதிபத மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

ஆனால்,டட்லி சிறிசேனவின் பரிந்துரைக்கமையவே மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார் என்ற உதயங்க வீரதுங்கவின் பதிவு புதிய சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.

இதேவேளை,மிக் போர் விமானக் கொள்வனவு ஊழல் தொடர்பான வழக்கில் இலங்கையில் தேடப்படும் நபரான உதயங்க வீரதுங்கவுக்கும், ஜனாதிபதியின் சகோதரருக்குமிடையிலான நெருக்கம் தொடர்பிலும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.