மறுப்பு தெரிவித்த இளம்பெண்! இளைஞர் செய்த கொடூர செயல் ! அதிர்ச்சி செய்தி

0

தமிழகத்தில் இளம்பெண்ணை ஒருதலைக் காதல் காரணமாக கொடூரமாக குத்திக் கொலை செய்த வழக்கில் இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஜவுளிக்கடையில் இளம்பெண் ஒருவர் வேலை செய்தார்.

அவர் பணிமுடிந்து கடையிலிருந்து விடுதிக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விசாரணையில், அந்தப் பெண்ணின் பெயர் மெர்சி (21) என்பது தெரியவந்தது. அவரைக் கொலை செய்த நபரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசில் ஒப்படைத்தார்கள்

விசாரணையில் அவரின் பெயர் ரவீந்தரன் என்பது தெரியவந்துள்ளது. ரவீந்தரன், மெர்சியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அவர், சில தினங்களுக்கு முன்பு தனது காதலைத் தெரிவித்திருக்கிறார். ஆனால், மெர்சி காதலிக்க மறுத்துள்ளார். அதனால் அவரைக் கொலைசெய்யும் திட்டத்துடன் கடந்த இரு தினங்களாகச் சுற்றிவந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மெர்சி பேருந்து நிலையம் அருகே நடந்து வந்தபோது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் குத்திக் கொலை செய்ததாகப் பிடிபட்ட ரவீந்திரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனிடையே, மெர்சியை ரவீந்திரன் கொலை செய்வதற்காக விரட்டும் காட்சிகள் அருகில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. அது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.