மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனங்கள் கொள்வனவா?

0

பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குண்டு துளைக்காத வாகனங்கள் இரண்டை கொள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வௌியிடப்பட்டுள்ளன.

குறித்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளதன் மூலம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்காக இதுவரை எந்த புது வாகனங்களும் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.