மாணவியை மடிமேல் உட்கார வைத்து பாலியல் தொல்லை கொடுத்த அரசியல்வாதி ! அதிர்ச்சியில் பாடசாலை நிர்வாகம்

0

நாகரிகம் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்தாலும் மனித மனங்களில் மாற்றம் ஏற்படுவதாக தெரியவில்லை .நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது .

பாடசாலை மாணவியை அரசியல்வாதி பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய கொடுமை இந்தியாவில் இடம்பெற்றுள்ளது .

ஆளும் அதிமுக கட்சியினை சேந்த அரசியவாதியே மாணவியிடம் தகாத முறையில் நடந்துள்ளார் .

தமிழ்நாட்டின் திருச்சியில், ஆழ்வார்தோப்பில் காயிதே மில்லத் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் அதிமுக செயலாளர் பள்ளியின் தற்காலிக தாளாளராக பணிபுரிந்து வருகின்றார் .

இவர் அதே பள்ளியில் 2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை தனது அறைக்கு அழைத்து அந்த சிறுமியை தனது மடிமேல் உட்கார வைத்து தகாத முறையில் பாலியல் சீண்டகளை செய்துள்ளார் .

அரசியல்வாதியின் தவறான தொடுகையினால் பயந்து போன பச்சிளம் பாலகி பயந்து போய் உடனடியாக ஓடிப்போய் தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார் .

தமது பிள்ளை கூறியதை கேட்டு அதிர்ச்சியும் கோபமும் அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு விரைந்து சென்று தமது பிள்ளைக்கு அரசியல்வாதியினால் நேர்ந்த கொடுமை தொடர்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

வாக்குவாதம் முற்றி கைகலப்பும் உருவானது . இந்த சம்பவம் தொடர்பில் போலீசாருக்கு அறிவிக்கப்பட்டது .அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த அரசியல்வாதியினை கைது செய்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.