” மாலையில் சந்திக்க வேண்டும் ” என்று கூறினார் .ஹரிஹரன் மீது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்
டுவிட்டர் மீ டூவில் நாளாந்தம் சுட சுட பாலியல் புகார்கள் வெளிவந்து நெட்டிசன்களுக்கு தீனி போட்டு கொண்டிருக்கின்றது .மலையாள இயக்குனர் மீது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் .
லட்சுமி ராமகிருஷ்ணன் இவர் தமிழ் சினிமாவின் பிரபல மூத்த நடிகைகளில் ஒருவர் .அதை விட சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் ..
லட்சுமி ராமகிருஷ்ணன மலையாள இயக்குனர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக தெரிவித்துள்ளார் .
இது குறித்து அவர் தெரிவிக்கையில் , ஹரிஹரன் இயக்கிய பழசிராஜா என்னும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
சிறிய காதாபாத்திரம் என்றபோதிலும், மம்மூட்டிக்கு மனைவியாக நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தமையினால் மகிழ்ச்சி அடைந்தேன் . பூஜையிலும் கலந்து கொண்டேன்.
அதன் பிறகு திருவனந்தபுரத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு நான் சென்ற போது இயக்குனர் ஹரிஹரன் என்னை மாலையில் சந்திக்க வேண்டும் என்று கூறினார்.
இதனால் குழப்பமடைந்த நான் மாலையில், சென்னை திரும்ப வேண்டும் என்று கூறினேன். ஆனால் இயக்குனர் ஹரிஹரன், அதெல்லாம் முடியாது உங்களை பார்க்கதான் நான் இங்கு வந்தேன் என்றும், கண்டிப்பாக இருங்கள் என்றும் கூறினார்.
ஹரிஹரனின் செயலினால் கோபம் அடைந்த நான் கடுமையாக திட்டிவிட்டு சென்னைக்கு திரும்பினேன் என்று கூறியுள்ளார் .
தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை தொடர்பில் இப்போது நான் வெளியில் சொன்னதும் பலரும் வக்காலத்து வாங்குகின்றார்கள் .ஹரிஹரன் பெரிய மனிதர் அவர் மீது அப்படியெல்லாம் சொல்லாதீங்க என்று கூறி எனது வாயை அடைகின்றார்கள் .
உண்மையில் பெரிய மனிதர்கள் என்றால் ஏன் இப்படி அசிங்கமாக நடந்துகொள்கின்றார்கள் ? என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார் .
மேலும் அன்று இயக்குனரின் தொல்லையினால் எனது பட வாய்ப்பு பறிபோனபோது யாருமே ஆதரவளிக்கவில்லை என்று புலம்பியுள்ளார் .