மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு; அதிரடியாக களமிறங்கியுள்ள தமிழ் பெண்கள்!

0

2018 ஆண்டுக்கான மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மும்முரமாக இடம் பெற்று வருகின்றது.

அரசியல் மற்றங்களாளும் அரசியல் குழப்ப நிலை மற்றும் சில அரசியல்வாதிகளின் விளம்பரம் தேடும் முயற்சியாலும் சில இடங்களில் மாவீரர் நிகழ்வு செயற்பாடுகள் மந்த கதியில் நகர்கின்றது.

அந்த வகையில்,

மன்னார் மாவட்டத்தில் உள்ள துயிலுமில்ல அபிவிருத்தி செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில், ஈச்சளவக்கை கிராம மாவீரர் குடும்பங்களை சேர்ந்த அனேக பெண்கள் உட்பட்ட பொது மக்கள் இன்று (17.11.2018) ஆட்காட்டிவெளி துயிலுமில்லத்தில் சிரமதானப்பணியில் ஈடுபட்டனர்.

அத்துடன் துயிலுமில்ல நிகழ்வுகளுக்காக கிராம மக்களால் சேகரிக்கப்பட்ட ஒரு தொகை நிதியும் மன்னார் மாவட்ட துயிலுமில்ல அபிவிருத்தி செயற்பாட்டு குழுவிடம் ஈச்சளவாக்கை கிராமத்தை சேர்ந்த மக்களால் கையளிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.