மீண்டும் நாளை கூடுகின்றது பாராளுமன்றம் ! சபாநாயகர் அதிரடி ! பீதியில் மகிந்த

0

நாளையதினம் மீண்டும் இலங்கை பாராளுமன்றம் கூடவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார் .

கடந்த நான்காம் திகதி ஜனாதிபதி மையத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நாளையதினம் பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளதாக சபாநாயகர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இடைக்கால தீர்ப்பு இன்று உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது .

இதன் படி மார்கழிமாதம் 7 ம் திகதி வரை மைத்திரியினால் வெளியிடப்பட்ட நாடாளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ,

நாளையதினம் மீண்டும் பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாளையதினம் தவறாது கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார் .

நாளைய தினம் நாடுமன்றம் கூடும் போது மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது .

மகிந்த மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டால் மகிந்த பெரும்பானமையை நிரூபித்தே ஆக வேண்டும் .இல்லையேல் மகிந்த பிரதமர் பதவியை இழப்பதுடன் ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்பார்.

Leave A Reply

Your email address will not be published.