அரசியல் கட்சி தாவலின் உச்சபட்ச சாதனையை வடிவேல் சுரேஸ் நிகழ்த்தியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில், மீண்டும் ஐ.தே.க பக்கம் தாவினார்.
அரசியல் குழப்பங்கள் ஆரம்பித்த வேளை மகிந்தவை சந்தித்த வடிவேல் அப்பிடியே ரணிலிடம் வந்து நான் மரியாதைக்காக மகிந்தவை சந்தித்தேன் என்று கூறி மறு நாள் மகிந்தவின் அமைச்சரவையில் அமைச்சுப் பொறுப்பை பெற்றுக் கொண்டார்.
மகிந்தவின் பிரதமர் கதிரை ஆட்டங்காணும் இவ்வேளை மறுபடியும் இன்று ரணிலிடம் சரணாகதி அடைந்துள்ளார்.