“முரளிதரன் சமூக உணர்வற்ற முட்டாள் ! மூஞ்சியில் குத்திய மனோ கணேசன்

0

அண்மையில் பிபிசி சிங்கள சேவைக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளார் முத்தையா முரளிதரன் வழங்கிய பேட்டியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார்.

இலங்கை நாடானது சிங்களவர்களுக்கே சொந்தம் என கூறியிருந்த முரளிதரன் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலை குறித்தும் கருத்து கூறியிருந்தார்.

அவர் தனது பேட்டியில் கூறியிருந்த பல விடயங்கள் தமிழ் மக்களை இழிவுபடுத்துவதாக அமைந்திருந்தது.

இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் கடந்த காலங்கள் தொடர்பிலும் மனித உரிமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துகிறார்களே தவிர மக்களது வாழ்வாதாரம் தொடர்பில் அக்கறை செலுத்துவதில்லை.

மக்கள் முதலில் மூன்று வேளை சோறை தான் எதிர்பார்க்கிறார்களே தவிர உரிமைகள் தொடர்பாக அவர்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. மக்களது அடிப்படை பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் ஜனநாயகம் , உரிமைகள் பற்றி பேசி எந்த பயனும் இல்லை என முரளிதரன் கூறியிருந்தார்.

காலகாலமாக இலங்கை தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க போராடி வரும் நிலையில் முரளிதரன் கூறியிருக்கும் இந்த கருத்து ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் இழிவுபடுத்துவதாக அமைந்திருந்தது

இந்நிலையில் முரளிதரனின் இந்த சர்ச்சை கருத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோகணேசன் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

” மூன்று வேளை சாப்பாடு என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும்.” என மனோகணேசன் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளை பொறுத்தவரை முரளிதரன் சக தமிழன் என்னும் அடிப்படையிலேயே அவர்களின் பார்வை அமைந்துள்ளது. இதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் இலங்கை தமிழர்களின் உணர்வை இழிவுபடுத்திய முரளிதரனுக்கு மனோகணேசன் சரியான பதிலை தான் வழங்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.