முல்லைத்தீவில் மதிய உணவில் பல்லி!! 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

0

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பாடசாலையில் இன்று வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி காணப்பட்டமை தொடர்பில் மதிய உணவை உட்கொண்ட 36 மாணவர்களும் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தும் வகையில் மாங்குளம் மற்றும் மல்லாவி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள வன்னிவிளாங்குளம் பாடசாலையில் இன்று மதியம் வழங்கப்பட்ட மதிய உணவினைப் பெற்றுக்கொண்ட மாணவி ஒருவரின் சாப்பாட்டுக்கோப்பைக்குள் உயிரிழந்த நிலையில் முழுமையான பல்லி ஒன்று காணப்பட்டதையடுத்து, மதிய உணவினை உட்கொண்ட 36 மாணவர்களும் உடனடியாக மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் மாங்குளம் வைத்தியசாலையில் போதிய இடவசதியின்மையால் 16 மாணவர்கள் மல்லாவி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மாங்குளம் வைத்தியசாலையில் தொடர்புகொண்டு கேட்டபோது, இந்தப்பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் உயிரிழந் பல்லி காணப்பட்டமை தொட்ரபில் உணவில் ஏதாவது நச்சுத்தன்மை ஏற்பட்டு மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதில் 16 மாணவர்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் மாணவர்களில் வித்தியாசங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் துணுக்காய் வலயக்கல்விப்பணிப்பாளரை தொடர்புகொண்டு கேட்டபோது, வலயக்கல்வித் திணைக்களத்திற்கு அண்மித்த பகுதியில் இப்பாடசாலைக்கு சென்று மாணவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை உதவிக் கல்விப்பணிப்பாளர் மற்றும் கல்வி உத்தியோகத்தர்களுடன் சென்று பார்வையிட்டதாகவும் இப் பாடசாலையில் 36 மாணவர்கள் இன்று மதிய உணவினை உட்கொண்டிருக்கின்றார்கள் எனவும் இதில் ஒரு மாணவரின் உணவில் மாத்திரம் முழுமையான பல்லி உயிரிழந்த நிலையில் காணப்பட்டிருக்கின்றதாகவும் உணவு பரிமாறும் இடத்தில்தான் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.