மைத்திரிக்கு நாளை ஆப்பு என்கிறார்? மனோ கணேசன்

0

சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன 33ஆம் பிரிவை மட்டும் கவனத்தில் எடுத்தே நாடாளுமன்றத்தைக் கலைத்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளதுடன் ஜனாதிபதியை அறிவாளி என மறைமுகமாக கிண்டலும் செய்துள்ளார்.

33ம் பிரிவு, பாராளுமன்றத்தை கூட்டும், கலைக்கும், ஒத்திவைக்கும், ஜனாதிபதியின் உரிமைகள் தொடர்பான முகவுரை என தெரிவித்துள்ள மனோ கணேசன், 70ம் பிரிவு, இந்த உரிமைகள் எந்த அடிப்படையில் பயன்படுத்த முடியும் என்ற விளக்கவுரையாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அதன்படி மைத்திரியின் ஆலோசகர்கள், 70ஐ கவனிக்காமல், 33ஐ மட்டும் பார்த்து “கலையுங்கள்” என்று சொல்ல, இந்த அறிவாளி கலைத்துவிட்டார் என மனோ கணேசன் கூறினார்.

இதேவேளை நாடாளுமன்றம் கலைப்பு சம்மந்தமான விசாரணைகள் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.