ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் அனைவரும் நாளை அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த அழைப்பினை கட்சித் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மைத்ரிபால சிறிசேன தலைமையில் விசேட கூட்டமொன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
குறித்த கூட்டத்தில் தேர்தலின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பேசப்படவுள்ளதுடன் மாவட்ட மட்டக்களில் மேற்கொள்ளக்கூடிய பிரசார நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தபடவுள்ளது.
இதேவேளை இம்முறை தேர்தலில் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவதென்ற குழப்ப நிலை மஹிந்த-மைத்திரி தரப்பினரிடையே நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.