மைத்திரி கொலைச் சதி! பொன்சேகா நாமல் குமாராவை அச்சுறுத்தினாரா?

0

முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என ஊழலுக்கு எதிரான படையணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார நாமல் குமார கோரிக்கை விடுத்துள்ளார்.

அம்பாறை பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி கொலை சாதி பின்னணி தொடர்பில் தான் தெரிவித்த கருத்திற்கு பின்னர் சரத் பொன்சேகா நடந்துகொண்ட விதம் கவலைக்குரியதாக உள்ளது என்றும் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கான சதி முயற்சி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சரத்பொன்சேகா இருப்பதாக நாமல் குமார வெளியிட்டிருந்தார்.

அவர் வெளியிட்ட இக்கருத்தின் பின்னர் இலங்கை அரசியலில் பலவேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.