யாழ்ப்பாணத்தில் தலைவரின் பிறந்த நாளுக்கு செய்யப்பட்ட கேக்கை பிடுங்கிய போலீசார் ! படங்கள் உள்ளே ! இதெல்லாம் ஒரு பிழைப்பு

0

சிவாஜிலிங்கம் உட்பட ஏழு பேரை அதிரடியாக கைது செய்த பொலிசார், அவர்கள் கொண்டு சென்ற கேக்கையும் பறிமுதல் செய்ததாக எமது ஈழம் நியூஸ் செய்திச்சேவைக்கு தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,

இன்று காலை வல்வெட்டிதுறையில் மேதகு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இல்லத்தில் துப்பரவு பணியில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களை பொலிசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றிருந்தனர்.

இதனை கேள்வியுற்ற சிவாஜிலிங்கம் தலமையிலான் இளைஞர்கள் சிலர் பாரிய கேக் ஒன்றை தாயர் செய்து கொண்டு தலைவர் இல்லம் நோக்கி சென்றுள்ளனர்.

இவர்களை வழிமறித்த வல்வை பொலிசார் சிவாஜிலிங்கம் உட்பட ஏழு இளைஞர்களையும் கேக்கையும் பறிமுதல் செய்துகொண்டு பொலிஸ் நிலையம் அளைத்து செல்வதாக முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றுள்ளனர்.

சிறிது தூரம் சென்றதும் அவர்களை இறக்கிவிட்டு கேக்கை மட்டும் எடுத்து சென்றுள்ளனர்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத சிவாஜிலிங்கம் ”அட பிக்காலி பசங்களா கேக்கு வேணும் எண்டா கேட்டு வேண்டலாம் தானே.. ஏண்டா இப்பிடி”. என முணுமுணுத்ததை காணக்கூடியதாக இருந்தது.

 

Leave A Reply

Your email address will not be published.