யாழ்ப்பாணத்தில் 7 வயது சிறுமியை கடத்தி வன்புணர்வு செய்த காமுகனுக்கு நடந்த கதி ! சபாஷ் சரியான தண்டனை

0

கொடிகாமம் பகுதியில், பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து 7 வயது சிறுமியைக் கடத்தி சென்று வன்புனர்வுக்கு உட்படுத்திய நபருக்கு, 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், இன்று (12) தீர்ப்பளித்தார்.

2011ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி இரவு, வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த நபர், பெற்றோர், சகோதரர்களுடன் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியைக் கடத்திச் சென்று, வன்புணர்ந்துள்ளார்.

இதையடுத்து, குறித்த நபர், சாவகச்சேரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற சுருக்கமுறையற்ற விசாரணைகளை அடுத்து, வழக்கு கோவைகள் சட்டமா அதிபர் திணைகளத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.

அதையடுத்து, சட்டமா அதிபர் திணைக்களத்தால், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில், குற்றப்பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த நபரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி, பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து சிறுமியை கடத்தி சென்ற குற்றத்துக்காக 5 வருட கடூழிய சிறைத்தண்டனையும் வன்புணர்வு குற்றத்துக்காக 7 வருட கடூழிய சிறைத்தண்டனையையும் விதித்து தீர்ப்பளித்தார்.

அத்துடன்,10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

அவ்வாறு அத்தொகைகளைச் செலுத்தத் தவறும் பட்சத்தில், மேலதிகமாக தலா 10 வருட சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.